அனைத்தும் நடந்து முடிதனவோ?
நேற்று பார்த்ததுபோல் தோன்றியது.
இன்று பூமியே புதிதாய் பூக்க,
நான் கண்ட அவள், காரணமோ?
மிண்ணும் கண்கள் இதயத்தை திருட,
விலை இல்லாத புன்னகை உயிரை பருக,
அவள் கருங்குழல் அசைவு
என்னை மொத்தம் இழுக்க,
தண்டனைக்கு தாவி ஓடிய மனசு
அவளை சுற்றி சிறைப்பட்டது.
சிரிப்பை கண்டது
என்னை மறந்தது
அவளாய் மாறியது.
- மாறிய பின்,
வ.வள்ளியப்பன்
july/3/2010
Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts
Sunday, July 4, 2010
Monday, June 28, 2010
நான் தேடும் கற்பனை பெண்ணே !!!
வயதோ இருபத்தி நான்கு
புத்தியோ பேதை பின் இருக்கு
யாருமில்லா கற்பனை பெண்ணே
என் விழி எந்நேரமும் உன்னை சந்திக்கிறது
யாரடி நீ?
ஏன் என்னை சுற்றி இருக்கிறாய்?
இமை விலகாத அளவுக்கு
ஏன் அழகாய் எனக்கு தோன்றுகிறாய்
மனதில் இருக்கும் நீ
என் கண் முன் வரும்போது ஏன் மறைகிறாய்?
காதல் கற்பனையை வளர்க்கும்
நானோ கற்பனையை காதலிக்கிறேன்
யாரை கேட்டது என் இதயம்?
உண்ணில் கலந்தது
மீட்டு தருவாயா?
நான் தேடும் கற்பனை பெண்ணே !!!
கற்பனையில்,
வ.வள்ளியப்பன்
27/JUNE/2010
Subscribe to:
Posts (Atom)
