Tuesday, April 19, 2011

தலைப்பு என்ன சொல்லுறதுன்னு தெரியல - 3


நோக்கம் இல்லாமல் சென்ற என் வாழ்க்கையை 
என்னிடம் நோக்க வைத்தாள்,
வேகம் இல்லாத என் முயற்சிகளில்   
வேகத்தடைகளை உடைக்க வைத்தாள், 
எந்நேரமும் கோபம் உள்ள எனக்கு 
அமைதியால் உள்ள நல்விளைவுகளை காட்டினால், 
அமைதியை நான் கடைப்பிடித்தாலும்  
'ரௌத்திரம் பழகு' என பாரதியாய் மாறுவாள்,         
நாள் முழுவதும் பேசிகொண்டிருக்கும்  என்னை
சிறு குழந்தையாய் மாறி பார்ப்பாள்,
இவள் யார் என்ற சிந்தனைகள் ஓட 
உண் குழந்தை என அவள் கண்களால் கூறுவாள்.   
ஆசைகள் தடுத்த என் மனதில்  
காதலை வளர வைத்தாள்,
மோகம் என்னும் வார்த்தைக்கு
அர்த்தங்களை புரிய வைத்தாள்,
தனித்திருந்த என்னை  
சிரிக்க வைத்தாள்,
சிரித்து கொண்டு இருந்த என்னை
ஏன்னோ  அழவைத்தாள்.   
அவளை எண்ணி ஏங்கிகொண்டுயிருக்கும்  என் மனதை
என் கண்ணீரால் துடைத்தேன்  
கண்ணீர் வத்தி போன பிறகும்  
அவள் ஏன்னோ அழியவேயில்லை
காதல் இவளோ  கொடியதா?
கொடியது என்றால் அது காதல் இல்லை, இல்லையா?

                                                                   சிரித்து கொண்டே,
                                                                    .வள்ளியப்பன்
                                                                        14/April/2010

No comments:

Post a Comment